தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மறைந்த இரா.சம்பந்தனின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 07 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை இந்து மயானத்தில் இடம்பெறவுள்ளது.
அன்னாரது பூதவுடல் 04 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அன்னாரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து 07 ஆம் ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்று, மாலை 4.00 மணியளவில் அன்னாரது பூதவுடல் தகனக்கிரியைக்காக திருகோணமலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்