புத்தளம் – அனுராதபுரம் பிரதான வீதியின் அந்தரவெவ சந்திக்கு அருகில் அனுராதபுரத்திலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த பலகைகளை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொள்ளளவை விட அதிகமாக டிப்பரில் பலகைகளை ஏற்றியதாலும் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததாலும் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் சாரதியும் உதவியாளரும் காயங்களுக்குள்ளாகி நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.