மருந்து ஒவ்வாமையால் உயிரிழப்பு : விசாரணைக்கு அழைப்பு

மருந்து ஒவ்வாமையினால் ஏற்படும் மரணங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை மறுதினம் முன்னிலையாகுமாறு தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அந்த கூட்டமைப்பின் தலைவர் ஜி.ஜி.சமல் சஞ்சீவ எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

இதேவேளை, சுகாதார தரப்பினர் ஊடகங்களுக்கு கருத்துரைப்பதை தடுக்கும் வகையில் சுகாதார அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 25 சுகாதார தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று நேற்று சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்