மருந்துப் பொருட்கள் வழங்கி வைப்பு!

-யாழ் நிருபர்-

காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக ஒரு தொகுதி மருந்துப்பொருட்கள் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டது.

ஒருத்தி திரைப்பட தயாரிப்பாளர்   கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு ஒருத்தி திரைப்படத்தை இலவசமாக திரையிட வழங்கியதன் மூலம் பெறப்பட்ட நிதியில் கனடா காரை கலாச்சார மன்றம் மருந்துப் பொருட்களை இலவசமாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இன்று காலை இடம் பெற்ற மருந்து பொருட்கள் கையளிக்கும் வைபவத்தில் ஒருத்தி திரைப்பட தயாரிப்பாளர் திரு.சுதாகரனும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்