-மன்னார் நிருபர்-
இலங்கை வங்கி மன்னார் கிளை ஊழியர்கள் நேற்று வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் அடையாள தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
அரச வங்கிகளின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நேற்று காலை 10.30 தொடக்கம் வங்கி கிளைகளை மூடி கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டது.
குறித்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பல்வேறு சேவைகள் நிமித்த வங்கிக்கு வருகை தந்த வாடிக்கையாளர்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர் கொண்டதுடன் வங்கி செயற்பாடுகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் பல தூர இடங்களில் இருந்து வருகை தந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.