மண்முனை தென்மேற்கு கோட்ட விளையாட்டுப் போட்டி!

-மட்டக்களப்பு நிருபர்-

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு புதன்கிழமை  அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இதன்போது வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும், மொத்த ப்புள்ளிகள் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப்பெற்ற பாடசாலைகளுக்கு வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

மொத்தப்புள்ளிகளின் அடிப்படையில் அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் முதலிடத்தினைப்பெற்று இவ்வருடத்திற்கான சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

இறுதிநாள் நிகழ்ச்சியை சிறப்பித்து, மண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்பட்ட ஆசிரியர் அணியினருக்கும், உடற்கல்வி ஆசிரியர், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் அணியினருக்கும் இடையில் கிறிக்கெட் போட்டி இடம்பெற்றது.

இதன்போது,  உடற்கல்வி ஆசிரியர்,  விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் அணியினர் வெற்றியீட்டியது.

கோட்டக்கல்விப் பணிப்பாளர் மூ.உதயகுமாரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோட்டத்திற்குட்பட்ட அதிபர்கள்,  ஓய்வு நிலை அதிபர்கள், ஆசிரியர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்