மண்சரிவில் சிக்கிய யுவதிகளின் இறுதி கிரியைகள்

-பதுளை நிருபர்-

சீரற்ற காலநிலையால் அண்மையில் பதுளை உடுவரை 6 ஆம் கட்டை பகுதியில் மண்மேடு சரிந்ததில் உயிரிழந்த 21 வயதுடைய இரு யுவதிகளின் சடலமும் பிரேத பரிசோதனையின் பின்னர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன்போது உறவினர்களால் பசறை அம்மணிவத்தை பகுதியில் அமைந்துள்ள இல்லத்தில் இருவரின் சடலமும் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்றைய தினம் ஞாயிற்று கிழமை சுமார் 1 மணியளவில் பசறை அம்மணிவத்தை தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினர் ஆறுமுகம் சிவலிங்கம் ஆகியோர் இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் பெருமளவான பொது மக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்