மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் வருடார்ந்த பொதுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை உதயகுமார் உதயகாந் தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற இந்த நிகழ்வின் போது கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிக்கும் வண்ணமாக 30 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வை தொடர்ந்து சிரேஸ்ட சட்டத்தரணி மயூரினால் சமாதான நீதிவான்களுக்கான தொளிவூட்டல் செயலமர்வு பல சட்டவிடயங்கள் தொடர்பாக இடம்பெற்றது.
இதன் போது சிரேஸ்ட சட்டத்தரணியினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக செயற்பாட்டிற்காக சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.




