மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியனாறு மரப்பாலம் பகுதியில் காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளார்.
மரப்பாலம் பகுதியில் உள்ள ஆற்றங்கரை பகுதிக்கு வந்த யானையே நேற்று திங்கட்கிழமை இரவு உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 25 வயதுடையது குறித்த யானையே இவ்வாறு உயிரிழந்துள்ளது என தெரிவிக்கப்படுவதுடன்.
யானையின் உயிரிழப்பு தொடர்பில் இதுவரை அறியப்படாத நிலையில் மட்டக்களப்பு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் யானையின் உயிரிழப்பு தொடர்பாக உடற்கூற்று பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
