மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததான முகாம் இன்று சனிக்கிழமை இடம்பெறுகின்றது.
கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் செயற்பாடுகள் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் ஒரு அங்கமாக இன்று இரத்ததான முகாம் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெறுகின்றது.
ஆகவே குருதிக்கொடையாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.











