மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட “டலன்ட் சோவ்” நிகழ்வு களுதாவளை தேசிய பாடசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றது.
பட்டிருப்பு வலையக்கல்வி பணிப்பாளர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிபர்கள், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
அதிபர்கள் ஆசிரியர்களிடம் காணப்படும் திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு வாய்ப்பாக அமைந்த இந்த நிகழ்வில் 70 பாடசாலைகளை சேர்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் அதிதிகளாக சுவாமி விபுலானந்தா அழகியற் கல்லூரியின் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி, மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
Beta feature
