மட்டக்களப்பு ஏறாவூரில் புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட இந்தியர்கள் 2 பேர் கைது
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வருகை தந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் ஏறாவூரில் நேற்று முன்தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மதுரையைச் சேர்ந்த சகோதரர்களான பாலகிருஸ்ணன் ராஜேஸ்வரி (வயது – 38), ஜெயசுந்தரம் தர்மர் (வயது – 51) ஆகியோரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான புதன்கிழமை மாலை ஏறாவூர் தளவாய் பகுதில் உள்ள வீடு ஒன்றை பொலிசார் சுற்றிவளைத்து முற்றுகையிட்ட போது அங்கு எந்தவிதமான ஆள் அடையாள ஆவணங்களும் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த இருவரையும் கைது செய்துள்ளனர்.
இவர்கள் கடந்த யூன் மாதம் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகை தந்து இந்த பகுதில் தங்கியிருந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்