
போர் நிறுத்த உடன்படிக்கை : கைதிகள் தொடர்ந்தும் விடுவிப்பு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையில் போர் நிறுத்த உடன்படிக்கை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், இருதரப்பிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணய கைதிகள் தொடர்ந்தும் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
அதனடிப்படையில் போர் நிறுத்த உடன்படிக்கை அமுலாகும் 7வது நாளான இன்று வெள்ளிக்கிழமை ஹமாஸ் தடுப்பில் இருந்த 8 இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் ஆயிரத்து 200 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
அத்துடன், 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் இருந்து கடத்திச்சென்று பணயக கைதிகளாக தடுத்து வைத்தனர்.
இதனையடுத்து ஹமாஸ் அமைப்பை இலக்கு வைத்து காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இதில் 14 ஆயிரத்து 800 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதுடன், அவர்களில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களும் அடங்குகின்றனர்.
இந்தநிலையில், பணய கைதிகளை விடுவிக்கும் நோக்கில் இரு தரப்பினரும் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், 7 நாட்களாக தற்காலிக போர் நிறுத்தம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்