யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.