-யாழ் நிருபர்-
யாழ் – சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான 26 வயதுடைய பெண்ணொருவர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் நேற்று முன் தினம் திங்கட்கிழமை 340 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவரை 6 மாதங்களுக்கு புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டார்.