பொலிஸ் கான்ஸ்டபிள் இருவர் பணி இடைநிறுத்தம்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காருமான சமன் கொல்லாவின் வீட்டின்மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் அவசரப் பிரிவுக்கு கிடைத்த தகவலை இவர்கள் தலைமைப் பொலிஸ் பரிசோதகருக்கு அறிவிக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் அன்றைய தொலைபேசி இயக்குநராகவும் கணினி செயற்பாட்டாளராகவும் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களுமே பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.