பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும் 6 ஊழியர்களுக்கு ஒரு வாரத்திற்குள் சிக்குன்குனியா நோய் ஏற்பட்டதை அடுத்து, இன்று திங்கட்கிழமை பொகவந்தலாவையில் உள்ள பாடசாலைகள் மற்றும் பொது இடங்களுக்கு மலத்தீன் புகை விசிறல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் ஏ.எஸ்.கே. ஜெயசூரிய தெரிவித்தார்.
குறித்த நோயால் பாதிக்கப்பட்ட 06 ஊழியர்களும் பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இது தொடர்பாக நுவரெலியா மாவட்ட சுகாதார அதிகாரிக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, குறித்த அலுவலக அதிகாரிகளால் இன்று குறித்த பகுதி முழுவதும் புகை விசிறல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.