பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்க

பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்க

பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்க

💢அதிக உடல் எடை காரணமாக, உடல் எடையைக் குறைக்க ஜிம், வாக்கிங், ஜாக்கிங் போகிறவர்களை பார்க்க முடிகிறது. இவர்கள் ஒரு பக்கம் என்றால், உடல் எடையை கூட்ட முடியாமல், ஒல்லியாக இருக்கும் மற்றொரு தரப்பினர். உடல் எடையைக் கூட்டுவது என்பது எளிதான காரியம் அல்ல. சற்று அதிகமாகவே நேரத்தை செலவிடவேண்டும். உடல் எடையை வேகமாக அதிகரிக்க வேண்டும் என்பதற்காக துரித உணவுகளை உட்கொள்வது, புரோட்டின் பொடிகளை சாப்பிடுவது, கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது என பலகட்ட முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் இது போன்ற செயல்கள் உங்கள் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வகையில் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.

  1. செவ்வாழைப்பழத்தை ஒரு நாளைக்கு ஒன்று என உட்கொண்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
  2. தினமும் வறுத்த வேர்க்கடலையை எந்த நேரமாக இருந்தாலும் 3 கைப்பிடி அளவு சாப்பிட்டு வருவதால் உடல் எடையை மிக எளிதாக அதிகரிக்க முடியும்.
  3. தினமும் வறுத்த வேர்க்கடலையை எந்த நேரமாக இருந்தாலும் 3 கைப்பிடி அளவு சாப்பிட்டு வருவதால் உடல் எடையை மிக எளிதாக அதிகரிக்க முடியும்.
  4. தினமும் ஒரு கையளவு உலர் திராட்சை உண்டால் உடல் எடையில் நன்கு மாற்றத்தைக் காணலாம்.
  5. மீன் மற்றும் இறால், முட்டை உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  6. நல்ல உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு கையளவு முந்திரி பழத்தை தினமும் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.
  7.  பாதாம் என்பது நரம்பு வளர்ச்சிக்கு பயன்படும் உணவாகும். இது உடல் எடை வேகமாக அதிகரிக்க ஆரோக்கியமான உணவாகும்.
  8. தேங்காய் பாலில் அதிக அளவு கலோரிகள் உள்ளது. தேங்காய் பால் குடிப்பதால் உடல் எடை நன்கு அதிகரிக்கும்.
  9.  உடல் எடையை கூட்டுவதற்கு உளுந்து பெரிதும் உதவும். தோல் உளுந்தைப் பயன்படுத்தி உளுந்தங்கஞ்சி, உளுந்தம்பருப்பு சாதம் போன்றவற்றை செய்து சாப்பிடலாம்.
  10. உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் இந்த பேரீச்சையை அதிகளவு சாப்பிட்டு, ஒரு கிளாஸ் பால் அருந்தி வந்தால் கண்டிப்பாக உடல் எடையை ஒரே வாரத்தில் அதிகரித்து விட  முடியும்.
  11. உடல் எடையை சீராக்க தினமும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
  12. வெண்ணெய் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
  13. இரவில் 4 முந்திரி, 4 பாதாம், 4 அக்ரூட் (வால்நட்), 5 பேரிச்சம்பழம், உலர் திராட்சை சேர்த்து ஊற வைக்க வேண்டும். காலையில், ஊற வைத்த நீருடன், இவற்றை சேர்த்து அரைத்து ஸ்மூத்தியாக குடிக்கலாம். இதனுடன் வாழைப்பழம் அல்லது ஆப்பிள் போன்ற பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
  14. தினமும் எள்ளு சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
  15. உருளைக்கிழங்கு மற்றும் பிற மாவுச்சத்துள்ள உணவுகள் அதிக கலோரிகளை தருகின்றன. தினமும் ஆரோக்கியமான மாவுச்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்வது ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்க ஒரு சிறந்த வழியாகும். இது உங்கள் கலோரி உட்கொள்ளலை அதிகரிக்கிறது. மேலும் உங்கள் தசை கிளைகோஜனை அதிகரிக்கிறது.

பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்க

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்