புலமைப்பரிசில் பரீட்சை மீள் கணக்கெடுப்பு தொடர்பில் கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் மீள் கணக்கெடுப்பில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைந்த 146 மாணவர்களையும் பிரபல பாடசாலைகளில் தேவையான சித்திகளை அவர்கள் பெற்றிருந்தால் சேர்த்துக்கொள்ளுமாறு கல்வியமைச்சு அதிபர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகளின் பிரகாரம், ஏற்கனவே சித்தியடைந்த மாணவர்கள் பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ளப்படுவதாகவும், அந்தத் தடைகளைப் பொருட்படுத்தாமல், மாணவர் சேர்க்கைக்கு தேவையான புள்ளிகளை மறு மதிப்பீட்டில் மாணவர்கள் பெற்றால், அந்த மாணவர்களையும் பாடசாலைகளில் சேர்த்துக்கொள்ளுமாறும் அமைச்சு இதன் போது கேட்டுக் கொண்டுள்ளது.

மாணவர்களின் பெறுபேறுகளின் மறு மதிப்பீட்டுக்காக தமிழ் மொழிமூலத்தில் 4823 மாணவர்களும் சிங்கள மொழிமூலத்தில் 20334 மாணவர்களும் விண்ணப்பித்திருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்