
புதிதாக 162 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு
தேர்தல் சட்டவிதிமுறை மீறல் தொடர்பாக நேற்று சனிக்கிழமை தேர்தல் ஆணைக்குழுவுக்கு 162 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
கடந்த மார்ச் 20ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 19ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியமை தொடர்பில் மொத்தமாக 1,874 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மொத்த தேர்தல் முறைப்பாடுகளில் 1,607 முறைப்பாடுகளுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.