56 வயதான பெண்மணி ஒரு கடல் மைல் தூரத்தை நீந்திக் கடந்து சாதனை படைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்
இவ் நீச்சல் போட்டியில் 40 வயதான நான்கு பிள்ளைகளின் தாய் முதலாமிடத்தையும், மூன்று பிள்ளைகள் மற்றும் இரண்டு பேரப்பிள்ளைகளைக் கொண்ட 44வயது பெண்மணி இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
வடமராட்சி வடக்கு இன்பருட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் 67வது ஆண்டு விழாவும், காண்டீபன் விளையாட்டு கழகத்தின் மாபெரும் விளையாட்டுப் போட்டியும் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
இதில் பெண்களுக்கான ஒரு கடல் மைல் நீச்சல் போட்டி இடம்பெற்றது.
இதன் போதே குறித்த வயோதிப பெண்கள் நீந்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இதில் ஆண்களுக்கான நீச்சல், படகோட்டப் போட்டிகள் இடம்பெற்றன. ஆயினும் பெண்களுக்கான நீச்சல் போட்டியில் வயோதிப பெண்களின் நீச்சல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
பருத்தித்துறை- தென்னியம்மன் முனையில் இருந்து இன்பசிட்டி வரை இந்த நீச்சல் போட்டி இடம்பெற்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்