பாலூட்டும் தாய்மார்களுக்கு நிவாரண உதவி
-மூதூர் நிருபர்-
வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பாலூட்டும் தாய்மார்கள் 200 பேருக்கு வெருகல் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அருணோதயம் அமைப்பினால் வழங்கப்பட்ட இவ் உலருணவுப் பொதிகள் பிரதேச செயலாளர் எம்.ஏ.எம்.அனஸ் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் அருணோதயம் அமைப்பினர் ,வெருகல் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்