பாடசாலை மாணவி கடத்தல்: பொலிஸ் பொறுப்பதிகாரி இடைநீக்கம்
கண்டியில் பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கம்பொல – தவுலகல பகுதியில் கடந்த 11ஆம் திகதி சனிக்கிழமை மாணவியொருவர் கடத்தப்பட்டார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் குறித்த பகுதியை கடந்து வந்த கம்போலா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஒரு பொலிஸ் அதிகாரி, தவுலகல பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததாகவும் எனினும் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவ தினத்தன்று பணியிலிருந்த பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய இரண்டு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.