பாடசாலை உபகரணங்கள் வாங்கித்தருவதாக ஏமாற்றி சிறுவன் துஷ்பிரயோகம்

மொரட்டுவ பிரதேசத்தில் சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹிரண பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த 13 வயது சிறுவனை பாடசாலை உபகரணங்கள் வாங்கித் தருவதாக ஏமாற்றி எகொட உயன தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கடற்கரைக்கு அழைத்துச் சென்று சந்தேகநபரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை இன்று செவ்வாய்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்