விவசாயிகள் தமது பயிர்களுக்கு ஏற்படக்கூடிய பல்வேறு அபாயங்களிலிருந்து பாதுகாப்புப் பெறும் வகையில், விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதிச் சபையினால் புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் அன்னாசி, பப்பாளி, வாழை உள்ளிட்ட பயிர்களுக்கும், விவசாயத் திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்படும் ஏனைய பயிர்களுக்கும் காப்புறுதி வழங்கப்படவுள்ளது.
விவசாயிகள் காப்புறுதித் தொகையின் அடிப்படைத் தொகையில் சுமார் 7 சதவீதத்தை காப்புறுதிக் கட்டணமாக செலுத்துவதன் மூலம் இந்தக் காப்புறுதிப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இயற்கை அனர்த்தங்கள், நோய்கள், பூச்சி மற்றும் புழுக்களின் தாக்கங்கள், அத்துடன் காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்கள் உள்ளிட்ட பல்வேறு அபாயங்களுக்கு எதிராக இந்தக் காப்புறுதிப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டால், ஒரு ஏக்கருக்கு 300,000 ரூபா முதல் 400,000 ரூபா வரை இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிர்ச்செய்கையில் ஏற்படும் அபாயங்களை முறையாக நிர்வகித்து, விவசாயிகள் தொடர்ந்து பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதற்கு உதவுவதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும், என விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.










