அனுராதபுரம் திஸ்ஸ வாவிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி நேற்று செவ்வாய்க்கிழமை வாவிக்குள் கவிழ்ந்து விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
முச்சக்கர வண்டியின் உரிமையாளர் மற்றும் மற்றுமொருவர் வாகனத்தை நிறுத்திவிட்டு வாவியில் நீராடச்சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று வீசியதன் காரணமாக முச்சக்கர வண்டி வாவிக்குள் கவிழ்ந்துள்ளதாக முச்சக்கர வண்டியின் உரிமையாளர் தெரிவித்தார்.
பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் இணைந்து முச்சக்கரவண்டியை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
