பம்பலப்பிட்டி முதல் தெஹிவளை வரையிலான கடலோர பகுதியில் இயங்கும் அங்கீகரிக்கப்படாத ஹோட்டல்கள், பிற கட்டமைப்புகளை செப்டம்பர் 10க்குள் அகற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என சிலுமின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் (Coast Conservation authorities) இந்த அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அகற்றுமாறு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
கடலோர மண்டலத்திற்குள் இயங்கும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள், வர்த்தக நடவடிக்கைகளுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காலக்கெடுவுக்குள் இணங்காத நிறுவனங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.










