பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை பெண் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெரானியாகலையைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் துபாயில் பணிப்பெண்ணாக பணியாற்றிய நிலையில் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளார். இந்நிலையில் 23,000 ‘பிளாட்டினம்’ பிராண்ட் சிகரெட்டுகள் கொண்ட 115 அட்டைப்பெட்டிகளை சுங்க அதிகாரிகள் சூட்கேஸ் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை சந்தேக நபர் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.