பணவீக்கம் சடுதியாக வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மை பணவீக்கம்  இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.

தளம்பல் மிக்க உணவு மற்றும்  உணவல்லாப் பொருட்களின் விலைகள் எதிர்பார்த்ததை விட அதிகளவில் குறைவடைந்தமை பணவீக்க வீழ்ச்சிக்கு காரணம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மார்ச் மாதத்தில் காணப்பட்ட 50.3 வீத பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 35.3 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன், உணவு மற்றும் உணவல்லா பண்டங்களின் பணவீக்கம் முறையே மார்ச் மாதம் 47.6, 51.7 வீதமாக இருந்தப் பணவீக்கம் ஏப்ரலில் 30.6, 37.6 வீதமாக குறைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்