யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற படகு விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மன்னாரைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
படகொன்று வேகமாக கரை திரும்பிக்கொண்டிருந்த போது கரையோரமாக சென்றுகொண்டிருந்த நபர் மீது மோதியுள்ளது. இதன்போது படுகாயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
படகினை செலுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.