-யாழ் நிருபர்-
வரலாற்றுச் சிறப்புமிக்க இணுவில் மருதனார்மடம் சுன்னாக ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் தேவஸ்தானத்தின் ஹனுமத் ஜெயந்தி இலட்சார்ச்சனைப் பெருவிழாவின் பஞ்சரக ஆஞ்சநேயரின் இரதோற்சவம் இன்று செவ்வாய் கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயருக்கும்,ஏனைய பாரிவார தெய்வங்களுக்கும் விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன.
கடந்த 29 ஆம் திகதி அன்று ஸ்ரீமத் ஆஞ்சநேய ஜெயந்தி இலட்சார்ச்சனைப்பெரு விழா ஆரம்பமாகி 9 நாளில் இரதோற்சவமும், நாளை புதன் கிழமை ஆஞ்சநேய ஜனனதின ஜெயந்தியும் இடம்பெற்று ஜெயந்தி இலட்சார்ச்சனைப் பெருவிழா இனிதே நிறைவடையும்
இதில் பல பாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.






