நைட்ரஸ் ஒக்சைட் வாயுவிற்கு தடை

நைட்ரஸ் ஒக்சைட் வாயுவை பிரித்தானிய அரசாங்கம் தடை செய்துள்ளது.

குறித்த வாயுவினால் பிரித்தானியாவில் அதிகப்படியான சமூக விரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம் நைட்ரஸ் ஒக்சைட் நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும் ஆற்றல் கொண்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரித்தானியாவில் இடம்பெறும் சமூக விரோத செயற்பாடுகளை தடுக்கும் ஒரு பகுதியாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்