விசேட நுளம்பு ஒழிப்பு வாரத்தின்போது 31,145 நுளம்பு இனப்பெருக்கம் ஏற்படக்கூடிய இடங்கள் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நுளம்பு பெருகும் அபாயம் கொண்ட 6,777 இடங்கள் இதன்போது இனங்காணப்பட்ட நிலையல், மேலும் நுளம்பு இனப்பெருக்கத்திற்கு ஏற்றவாறு பராமரிக்கப்பட்ட 3,916 இடங்களுக்கு சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் 1,470 இடங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், எதிர்காலத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இது குறித்து கவனம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த திட்டம் 15 மாவட்டங்களில் 95 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டது.