தெஹியத்தகண்டிய, ஹெனானிகல வெவாவில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
காலி ஹபராதுவ பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இரு இளைஞர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நான்கு பேர் கொண்ட குழுவுடன் நீராடச் சென்றபோது அலையில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அவர்களில் இருவர் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொட்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.