ஒரு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாக நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இது நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வருகிறது.
சந்தையில் முட்டை விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
முட்டை ஒன்றின் விலை 65 ரூபாவாக உயர்ந்துள்ள பின்னணியில் வர்த்தக அமைச்சரும் தலையிட வேண்டியிருந்தது.
இதன்படி, முட்டை உற்பத்தியாளர்களுக்கும், பொறுப்பான அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பல இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதுடன், முட்டையின் விலையை குறைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், இவ்வாறான பின்னணியில், 2022 ஆகஸ்ட் 19 முதல் வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும், பழுப்பு மற்றும் சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும் நிர்ணயம் செய்து நுகர்வோர் விவகார அதிகாரசபை இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
தற்போது சந்தையில் ஒரு முட்டை 65 ரூபாவாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதுடன், அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் உட்பட பல சங்கங்கள் நேற்று பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முட்டை ஒன்றின் விலை குறைக்க தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே முட்டை ஒன்றின் அதிகபட்ச விலை 43 மற்றும் 45 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
எனினும், அதிகபட்ச சில்லறை விலையில் முட்டைகளை விற்பனை செய்வதில் சிக்கல் இருப்பதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.