மொனராகல – புத்தல பெல்வத்த சர்க்கரை நிறுவனம் நிதி நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில், தனது 500 மெட்ரிக் டன் பழுப்பு சர்க்கரையை நட்டத்தில் விற்பனை செய்துள்ளதாக நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர்.
ஒரு கிலோ சர்க்கரைக்கு 44 ரூபாய் நட்டத்தில் விற்கப்பட்டதாகவும், இதனால் நிறுவனம் 4.2 மில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே 2025இல் ஊழியர்களின் சம்பளம் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கான பணவழங்கல்களை மேற்கொள்ள நிதி திரட்டுவதற்காக, நிறுவனம் தனது சர்க்கரை இருப்புகளில் ஒரு பகுதியை நட்டத்தில் விற்றதாகக் கூறப்படுகிறது.
தற்போது, நிறுவனத்திடம் 17,000 மெட்ரிக் டன் விற்கப்படாத சர்க்கரை இருப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்கு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளதாகவும், இது தொடர்பாக மேலதிக விவரங்கள் விரைவில் வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.










