பிட்டிகல – அமுகொடை பிரதசத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு, வாள் மற்றும் பொல்லுகளினால் தாக்கி ஒருவரை கொலை செய்து மேலும் ஒருவரை காயப்படுத்திய கொலை குற்ற செயல்கள் தொடர்பாக பலப்பிட்டி மேல் நீதிமன்றில் இடம்பெற்ற நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் நான்கு பிரதிவாதிகளுக்கு நேற்று புதன் கிழமை மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தெஹிவளை, மொறட்டுவை மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.