நாமலின் சட்டத்தரணி பட்டம் மோசடியாக பெறப்பட்டதா?

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டதரணி தகுதிகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக குற்றவியல் விசாரணை திணைக்களம் (சிஐடி) கொழும்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

11 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பரீட்சையின் போது நாமல் ராஜபக்ஷ சலுகை பெற்றதாகக் கூறப்படும் முறைப்பாட்டை தொடர்ந்து இந்த விசாரணை நடத்தப்பட்டது.

அவர் தனது சட்டப் பட்டம் மோசடியாகப் பெற்றதாகவும், ஒரு தனி அறையில் இரண்டு வழக்கறிஞர்களின் உதவியுடன் பரீட்சை எழுதியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

எனினும் நாமல் ராஜபக்ஷ இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க