வவுனியாவில் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண் ஒருவரின் கடன் அட்டையை திருடி தங்க நகைகளை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா குருமன்காடு பகுதியில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்கு வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண் சென்றிருந்த போது குறித்த சந்தேக நபர் கடன் அட்டையை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் இருந்து 1 செயின், 2 வளையல்கள் மற்றும் 2 காதணிகள் உட்பட பல தங்க நகைகள் மற்றும் பல பொருட்களை அடகு வைத்த ரசீது ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.