தேர்தல் தொடர்பாக கடந்த 2 நாட்களில் 6 முறைப்பாடுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக கடந்த இரண்டு நாட்களில் ஆறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 01 மற்றும் 02 ஆம் திகதிகளில் பெறப்பட்ட முறைப்பாடுகள் அனைத்தும், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கல்கிசை, கொழும்பு வடக்கு, நுகேகொடை, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் இருந்து முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளன.

தேர்தல் தொடர்பாக பொருட்கள் மற்றும் பொதிகளை விநியோகித்தல், தேர்தல் சட்டங்களை மீறி பேஸ்புக் பயன்படுத்துதல், சட்டவிரோத சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை காட்சிப்படுத்துதல், போன்ற முறைப்பாடுகள் இவ்வாறு பதிவாகியுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க