முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் முறைகேடு மற்றும் பதவி துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட குழு இன்று திங்கட்கிழமை முதல் தனது விசாரணையை ஆரம்பிக்கவுள்ளது.
குறித்த குழுவானது கடந்த சில வாரங்களாக பாராளுமன்ற வளாகத்தில் கூடி முதற்கட்ட விசாரணைகளை நடத்தியது. அதன்படி, தேசபந்து தென்னகோனுக்கு விசாரணைக் குழுவின் முன் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தேசபந்து தென்னகோன் முதல் முறையாக விசாரணைக் குழுவின் முன் ஆஜராக உள்ளதாக பாராளுமன்றத் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
விசாரணைக் குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்றக் குழு அறை எண் 8 இல் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.