தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரம் – பலத்த மழை பெய்யும்
தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பு பிரிவு இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
பருவமழை காரணமாக சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, வடமேல் மாகாணத்திலும் ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யும்.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணிக்கு 45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
எனவே, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக, பிரதேசங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்