துப்பாக்கி பிரயோகம் : இலக்கு தப்பியது – விசாரணைகள் ஆரம்பம்

காலி – தடல்ல பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி பிரயோகம் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நபர் ஒருவரை இலக்கு வைத்து இத் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட போதிலும் அவர்களின் இலக்கு தவறியதால் இந்த துப்பாக்கி பிரயோகத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கி சூடு இன்று சனிக்கிழமை பிற்பகல் 1.30 அளவில் நடத்தப்பட்டுள்ளது

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.