பிலிப்பைன்ஸின் பலாவான் மாகாணத்தில் உள்ள கொரோன் கடற்பகுதியில், ‘எம்.வி. ஜூன் அஸ்டர்’ (MV June Aster) பயணிகள் படகு தீப்பிடித்ததில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 87 பேர் காணாமல் போயுள்ளதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
மணிலாவில் இருந்து கொரோனை நோக்கிச் சென்ற இந்தப் படகில் 117 பயணிகள் மற்றும் 17 பணியாளர்கள் என மொத்தம் 134 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 42 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மோசமான வானிலை மற்றும் கடுமையான கடல் அலைகளுக்கு மத்தியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்










