-கிண்ணியா நிருபர்-
வாசல் வாசகர் வட்டத்தின் வெளியீடான வாசல் கவிதை சஞ்சிகை வெளியீடு கடந்த சனிக்கிழமை திருகோணமலை மாநகர சபை பொது நூலக கேட்போர் கூடத்தில் வாசல் வாசல் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு, வாசல் வாசகர் வட்டத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அரசரெத்தினம் அச்சுதனின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு, பிரதம விருந்தினராக திருகோணமலை – சேனையூர் அனாமிகா கலை பண்பாட்டு மையத்தின் தலைவர் கலாபூஷணம் இரா.இரத்தினசிங்கம் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களாக திருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளர்களான நீங்களும் எழுதலாம் சஞ்சிகையின் ஆசிரியர் கவிஞர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம், கவிஞர் செ.ஞானராசா, கவிஞர் ஜெனீரா தௌபீக் ஹைருல் அமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரதம ஆசிரியர் உரையினை வாசல் கவிதை சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் ஊடகவியலாளர் ச.திருச்செந்தூரன் நிகழ்த்தியதுடன், ‘வாசல் நோக்கு’ என்ற தலைப்பில் சிறப்புரையினை திருகோணமலை தமிழ்ச்சங்கத்தின் தலைவர் மூத்த எழுத்தாளர் கலாபூஷணம் திருமலை நவம் அவர்கள் ஆற்றினார்.
இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளர்களான நீங்களும் எழுதலாம் சஞ்சிகையின் ஆசிரியர் கவிஞர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம், கவிஞர் செ.ஞானராசா, கவிஞர் ஜெனீரா தௌபீக் ஹைருல் அமான் ஆகியோர் ‘கலைக்கேசரி’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர் மேலும் நிகழ்வின் பிரதம விருந்தினருக்கு சிறப்பு கெளரம் வழங்கப்பட்டது.
தமிழ்மொழி வாழ்த்தினை திருகோணமலை இந்துக்கல்லூரி மாணவன் அ . கோகுலரமணன் வழங்கினார், வரவேற்புரையை ஊடகவியலாளர் பா. விபூசிதன் நன்றியுரையினை இளங்கலைஞர் சிறிசெல்வம் ஜெயசிறி நிகழ்த்தியதுடன், நிகழ்ச்சி தொகுப்பினை செல்வி .ரூ.ஆன் இவானா வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் எமுத்தாளர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.




