தாயின் சடலம் மலர்சாலையில் இருக்க றக்பீ போட்டியில் பங்கேற்ற மாணவன்

கொழும்பு பகுதியில் பாடசாலைகளுக்கிடையிலான றக்பி லீக் போட்டியில் தன்னுடைய தாய் இறந்து அவரது சடலம் மலர்சாலையில் இருக்கும் போது தன்னுடைய பாடசாலைக்கும்இ தாய்க்கும் மகிமை சேர்ப்பதற்காகவும் தன்னுடைய பாடசாலை வெற்றி பெறுவதற்காகவும் தன் துயரை வெளிகாட்டாது போட்டில் மாணவன் ஒருவன் பங்கேற்றுள்ளான்.

இசிபதன அணியை பிரதிநிதித்துவப்படுத்திய ஹெஷான் ரந்திமாலே இவ்வாறு தமது அணிக்காக போட்டியில் கலந்துகொண்டார்.

குறித்த போட்டியில் மருதானை புனித ஜோசப் கல்லூரி மற்றும் கொழும்பு இசிபதன வித்தியாலயத்திற்கு இடையிலான போட்டியில் இசிபதன வித்தியாலயம் 28-18 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இசிபதன கல்லூரிக்கு இந்தப் போட்டி மிகவும் முக்கியமானதாக இருந்ததுள்ளது. தோல்வியடையாத தொடரை தக்கவைக்க இந்தப் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டியிருந்தது.
தாயின் சடலம் மலர்சாலையில் வைத்திருக்க தனது அணியின் வெற்றிக்காக ரந்திமால் விளையாடியிருந்தார். ஆரம்பத்தில் இசிபதன வித்தியாலயத்திற்கு முதல் ட்ரையை ரந்திமால் பெற்றுக்கொடுத்தார். மேலும் தனது அணியின் வெற்றிக்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் விளையாடினார்.
இந்த போட்டியின் பின்னர் இசிபதன அணியின் எதிர் போட்டியாளர்களான மருதானை சென்.ஜோசப் அணி வீரர்களும் ரந்திமாலின் தாயாரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், விளையாட்டின் சகோதரத்துவத்தையும் மனித நேயத்தையும் உலகிற்கு எடுத்துரைத்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்