-யாழ் நிருபர்-
யாழில் நேற்று வியாழக்கிழமை குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி, 3ஆம் ஒழுங்கையைச் சேர்ந்த இரத்தினம் சண்முகராசா (வயது – 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.