தனியாக இருப்பதற்கு போர்: 2700 முறை பொலிஸாருக்கு அழைப்பு

ஜப்பான் நாட்டில் டோக்கியோ பெண் ஒருவர் தீயணைப்பு படையினருக்கு 2700 முறை எமர்ஜென்சி கால் செய்ததைத் தொடர்ந்து அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிபா மாகாணத்தில் உள்ள மாட்சுடோ நகரில் வசித்து வரும் ஹிரோகோ ஹடகாமி (வயது – 51) என்கிற பெண் கடந்த 2.9 ஆண்டுகளில் மட்டும் 2,761 முறை போலியான எமர்ஜென்சி கால்களை செய்துள்ளார்.

குறித்த பெண் கடந்த ஆகஸ்ட் 2020 முதல் மே 2023 வரை வயிற்று வலி, கால் வலி என பல்வேறு காரணங்களை சொல்லி நோயாளர்காவு வண்டி மற்றும் தீயணைப்பு வாகனங்களைக் கேட்டு வரிசையாகக் கால் செய்துள்ளார். இவரது எமர்ஜென்சி காலை தொடர்ந்து அங்கே நோயாளர்காவு வண்டி செல்லும். ஆனால் ஒவ்வொரு முறையும் தனக்கு நோயாளர்காவு வண்டி தேவையில்லை. யார் கால் செய்தார்கள் என்றே தெரியவில்லை என்று கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதுபோல செய்யக் கூடாது என்று பொலிஸாரும் தீயணைப்புத் துறையினரும் அந்த பெண்ணுக்கு பல முறை வார்னிங் கொடுத்துவிட்டனராம்.

குறித்த நிலைமை எல்லை மீறிப் போகவே இது தொடர்பாகத் தீயணைப்புத் துறையினர் கடந்த ஜூன் 20ஆம் திகதி பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் குறித்த பெண்ணை கைது செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோது அந்த பெண் தான் தனிமையில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், தனக்கு குடும்பம் என யாருமே இல்லை என்று தெரிவித்த அவர்இ இதனால் போரடித்ததால் இப்படிச் செய்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்இ ” நான் தனிமையில் இருந்தேன் யாராவது நான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்தேன்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்