பிரேசிலை சேர்ந்த இம்மானுவேல் என்ற பெண் தனது கைத்தொலைபேசியுடன் வெளியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ஒரு இளைஞர் அவரது விலை உயர்ந்த கைத்தொலைபேசியை பறித்து கொண்டு ஓடியுள்ளார். அவர் அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் சத்தம்போட்டு உதவி கேட்டு அழுதும் , கத்தியும் யாரும் உதவ முன்வரவில்லை.
ஆனால், கைத்தொலைபேசியை பறித்து கொண்டு ஓடிய திருடனோ கொஞ்ச நேரம் ஓடிய பிறகு, தாம் திருடியது என்ன போன் என்பதை அந்த கைத்தொலைபேசியை எடுத்து பார்த்துள்ளார்.
அப்போது, அந்த கைத்தொலைபேசி சொந்தக்காரரான இம்மானுவேல்லின் போட்டோ அதில் இருப்பதை பார்த்து, ஆகா என்ன ஒரு அழகான பெண், இவரிடம் திருடி தப்பு செய்துவிட்டோமே என்று வருந்தியுள்ளார்.
பின்னர் அந்த பெண்ணிடம் மன்னிப்புகேட்டு தொலைபேசியை திருப்பி கொடுத்துள்ளார். இதில் இம்மானுவேலுக்கு அந்த நபரை மிகவும் பிடித்து போய்விட்டது.
அந்த விலை உயர்ந்த கைத்தொலைபேசியை திருப்பி கொடுத்த அவர் , பதிலுக்கு அவரது இதயத்தை திருடி விட்டார். பிறகு இருவரும் பேசிப்பழகி காதலர்களாக பழக ஆரம்பித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் காதலித்து வருகிறார்கள். இது குறித்து இருவரும் நேல்காணல் ஒன்றையும் வழங்கியுள்ளனர்.