தண்டவாளங்கள் மாயம்: விசாரணைகள் ஆரம்பம்
புனரமைக்கப்பட்ட அனுராதபுரம் – ஓமந்தை ரயில் பாதையில் தண்டவாளங்கள் திருடப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
ரயில் பாதை புனரமைப்பு பணிகளின் போது நீக்கப்பட்ட தண்டவாளங்களை நேற்று சனிக்கிழமை இரவு கொண்டு சென்ற நபர்கள், யாழ் ராணி ரயிலில் மோதியதையடுத்து இந்த திருட்டு தொடர்பில் தெரியவந்ததாக ரயில்வே பாதுகாப்பு அத்தியட்சகர் அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும், சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில் கொள்ளை இடம்பெற்ற இடத்தில் ரயில் தண்டவாளங்களை வெட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட கேஸ் கட்டர், ஒக்சிஜன் தாங்கி மற்றும் 05 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் என்பனவும் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்